கர்ப்பிணி மனைவி... குடியுரிமைக்காக காத்திருந்த இளைஞர்: பிரித்தானியாவில் கொடூர கொலை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் குத்திக் கொல்லப்பட்ட நிலையில், அவரது உடலை மீட்டுவர இந்திய அரசின் உதவியை அவரது குடும்பம் நாடியுள்ளது.

ஐதராபாத், நூர்கான் பஜார் பகுதியைச் சேர்ந்தவர் முகமது நதிமுதீன். இவர் லண்டனில் உள்ள டெஸ்கோ சூப்பர் மார்க்கெட்டில் கடந்த ஆறு வருடங்களாக வேலை பார்த்து வந்தார்.

இவர் மனைவியும் லண்டனில் பணியாற்றி வருகிறார். வழக்கமாக வேலை நேரம் முடிந்ததும் வீட்டுக்குத் திரும்பிவிடும் நதிமுதீன், கடந்த புதன்கிழமை வீட்டுக்குத் திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து டெஸ்கோ சூப்பர் மார்க்கெட் நிர்வாகத்திடம் அவரது மனைவி விசாரித்துள்ளார். அப்போதுதான் நதிமுதீன், பார்க்கிங் பகுதியில் கொல்லப்பட்டு கிடந்தது தெரிய வந்தது.

முதற்கட்ட விசாரணையில் நதிமுதீனை அவருடன் பணியாற்றிய, ஆசியாவை சேர்ந்த ஒருவர் குத்திக் கொன்றுள்ளது தெரியவந்தது.

இந்த விவகாரம் தொடர்பில் உள்ளூர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர் உடலை இந்தியாவுக்கு கொண்டுவருதற்கு அவரது குடும்பத்தினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உதவியை நாடியுள்ளனர்.

உடலை இந்தியாவுக்கு கொண்டு வர இன்னும் சில நாட்கள் ஆகும். லண்டன் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம்.

நதீம், இன்னும் சில நாட்களுக்குள் இங்கிலாந்தின் குடியுரிமையை பெற இருந்தார். அதற்குள் இப்படியாகிவிட்டது.

எதற்காக இந்த கொலை நடந்தது என்று தெரியவில்லை. நதீம் மனைவி கர்ப்பிணியாக இருக்கிறார்’’ என்று நதீமின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்