உலகின் முக்கிய தலைவர்கள் பலருடன் ரகசிய உறவு வைத்திருக்கும் பிரித்தானியா: வெளியான பட்டியல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஐரோப்பிய நாடுகளை பொறுத்தமட்டில் பிரித்தானியா ஒரு குட்டி தீவாக இருந்தாலும் உலகின் முக்கிய தலைவர்கள் பலர் இங்கு வந்து கல்வி பயின்றுள்ளனர்.

உலக அளவில் பெரும் செல்வாக்கு மிக்க பல தலைவர்கள் பிரித்தானியாவில் கல்வி பயின்றவர்கள் என்ற பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதற்கு பிரித்தானியாவின் சர்வதேச தரம் வாய்ந்த கல்வி முறையே காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரித்தானியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள், கல்லூரிகள் என பெரும்பாலானவை உலக அரங்கில் பிரபலமானவையாகும்.

தற்போது பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் உலகின் செல்வாக்கு மிகுந்த 46 தலைவர்கள் பிரித்தானியாவில் தங்கள் கல்வியை முடித்தவர் என தெரியவந்துள்ளது.

அயர்லாந்தின் ஜனாதிபதி மைக்கேல் ஹிக்கின்ஸ் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.

ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டர் ஆர்பன் ஆக்ஸ்ஃபோர்டிலுள்ள பெம்ப்ரோக் கல்லூரியில் அரசியல் அறிவியலைப் படித்தவர்.

மட்டுமின்றி நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட், பெல்ஜியத்தின் மன்னர் முதலாம் பிலிப் உள்ளிட்ட 10 ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுள்ளனர்.

ஆசிய தலைவர்களில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட 8 பேர் பிரித்தானியாவில் கல்வி பயின்றுள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தலைவர்கள் 11 பேர் பிரித்தானியாவில் கல்வி பயின்றுள்ளனர்.

ஆப்பிரிக்க நாட்டு தலைவர்கள் 11 பேர் பிரித்தானியாவில் கல்வி பயின்றுள்ளனர்.

தென் அமெரிக்காவில் உள்ள கயானா நாட்டின் ஜனாதிபதி டேவிட் க்ரேன்ஜர் பிரித்தானியாவில் கல்வி பயின்றுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்