மகனுக்கு ஆர்ச்சி என்ற பெயர் வைக்க இவர்தான் காரணமாம்: மேகனின் தோழிகள் கூறுகிறார்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

நான்தான் முதலில் ஆர்ச்சி என்று பெயர் வைத்தேன், நான் வைத்த பெயரை காப்பி அடித்து விட்டார்கள் என ஆளாளுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்க, ஆர்ச்சி என்ற பெயர் வர காரணம், மேகனின் செல்லப்பூனைதான் என்கிறார்கள் அவரது தோழியர்.

பிரித்தானிய இளவரசி மேகன், தனது செல்லப்பூனையின் பெயரிலிருந்துதான் தனது மகனுக்கு ஆர்ச்சி என்ற பெயரை தேர்வு செய்ததாக இன்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேகனின் முன்னாள் நெருங்கிய தோழி ஒருவர், மேகனுக்கும் அவரது தாய்க்கும் செல்லப்பிராணியாக இருந்த ஒரு பூனையின் பெயரிலிருந்துதான் தனது மகனின் பெயரை மேகன் தேர்வு செய்ததுபோல் தோன்றுகிறது என்று கூறியுள்ளார்.

ஓரிடத்தில் சிக்கியிருந்த ஆர்ச்சியை (பூனையை) மேகனின் தாய் டோரியா மீட்க, அது மேகன் குடும்பத்தின் ஒரு முக்கிய உறுப்பினர் ஆகிவிட்டது.

மேகனுக்கு ஆர்ச்சியுடன் விளையாடுவது மிகவும் இஷ்டம், மட்டுமல்ல, எப்போதும் ஆர்ச்சியைக் குறித்தே தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பாராம் மேகன்.

மேகன் தனது குழந்தைக்கு ஆர்ச்சி என்று பெயர் வைத்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை, காரணம், அவர் அந்த பூனையை அவ்வளவு நேசித்தார் என்கிறார்கள் அவரது தோழியர்.

மேகன் எந்த அளவு அந்த பூனையை நேசித்தார் என்றால், அதற்கு ஏராளமாக திராட்சைப்பழங்களைக் கொடுத்து அது மிகவும் பருமனாகும் அளவுக்கு நேசித்தாராம்.

ஆனால் மேகன் சிகாகோவில் கல்லூரி படிப்பிற்காக சென்றிருந்தபோது அவரது செல்லப் பூனை இறந்துவிட்டதாம்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்