லண்டன் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய மர்மநபர்: பலத்த பாதுகாப்பு

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

லண்டனில் உள்ள மசூதியில் ரமலான் தொழுகை நடைபெற்றிருக்கொண்டிருந்தபோது மர்மநபர் ஒருவர் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளார்.

Ilford இல் அமைந்துள்ள Seven Kings மசூதியில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு மாலை நேர தொழுகை நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்மநபர் மசூதியின் வெளிப்புறத்தில் நின்றுகொண்டு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.

இதில் நபர்களுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை மற்றும் மசூதிக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிசார் கூறியுள்ள நிலையில், இந்த சம்பவம் தீவிரவாதம் தொடர்புடையது கிடையாது என தெரிவித்துள்ளனர்.

முகமூடி அணிந்து வந்த மர்மநபர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அவரை பிடிக்க முற்படுகையில் தப்பித்து சென்றுவிட்டதாகவும், கடவுளின் ஆசிர்வாதத்தில் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்டவில்லை என இணையதளவாசிகள் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மசூதியின் இமாம் Mufti Suhail விடுத்துள்ள அறிக்கையில், எதற்காக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்பது குறித்த தெளிவான காரணம் தெரியவரவில்லை. இதனால் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதை மக்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், மசூதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்