மகன் பிறந்த நேரத்தில் அம்மா இல்லாததை நினைத்து வருந்திய ஹரி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தன்னுடைய மகன் ஆர்ச்சி, வாழ்க்கையில் ஒரு புதிய கவனம் மற்றும் இலக்கைக் கொடுத்திருப்பதாக இளவரசர் ஹரி கூறியுள்ளார்.

இளவரசர் ஹரி - மேகன் தம்பதியினருக்கு கடந்த திங்கட்கிழமையன்று பிறந்த ஆண் குழந்தைக்கு 'ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர்' என பெயர் வைக்கப்பட்டிருந்தது.

அரச குடும்பத்தில் பிறந்திருக்கும் குட்டி இளவரசரை வரவேற்கும் விதமாக பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் Invictus விளையாட்டுக்களின் போது குட்டி இளவரசர் குறித்து பேசிய ஹரி, குழந்தை பிறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு வரை நான் மனஅழுத்ததோடு போராடினேன். ஆனால் என் மனைவியின் கர்ப்பம் எனக்கு ஒரு குறிக்கோளை கொடுத்தது.

என்னுடைய குழந்தை அதிக மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது என கூறியுள்ளார்.

ஒரு தாய் இல்லாதது சில வகையான பாதுகாப்பு இல்லாததை போன்றது எனகூறியிருக்கும் அவர், மகன் பிறந்த நேரத்தில் தன்னுடைய அம்மா இல்லாததை நினைத்து வருந்தியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...