காதலியை பாலியல் பலாத்காரம் செய்து இஸ்லாமிய வீடியோக்களை பார்க்குமாறு வற்புறுத்திய காதலனுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த முகமது கான் என்கிற இளைஞர் 2016-ம் ஆண்டு தன்னுடைய காதலை கூறிய சில நாட்களிலே காதலி மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளார்.
பற்களை உடைத்து, கழுத்தை நெரித்து, பாலியல் பலாத்காரம் செய்து என 18 மாதங்களாக காதலியை கொடுமைப்படுத்தியுள்ளார்.
மேலும், அவரை சிறந்த காதலியாக மாற்ற நினைத்து இஸ்லாமிய வீடியோக்களை பார்க்குமாறு வற்புறுத்தியுள்ளார்.
மகளின் நடத்தையில் மாற்றத்தை பார்த்த அவருடைய அம்மா பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், முகமது கானை கைது செய்தனர்.
இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றம் சுமத்தப்பட்ட முகமது கானுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.