குழந்தை பிறந்ததும் பணிக்கு திரும்பிய ஹரி: காத்திருந்த சர்ப்ரைஸ்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

குழந்தை பிறந்து மூன்றே நாட்களில் கடமையாற்ற கிளம்பி விட்டார் பிரித்தானிய இளவரசர் ஹரி.

அடுத்த ஆண்டிற்கான Invictus விளையாட்டுக்களை லான்ச் செய்வதற்காக ஹரி நெதர்லாந்துக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரது மகனான குட்டி இளவரசர் ஆர்ச்சிக்கு பரிசுகள் வழங்க பலர் காத்திருந்தார்கள்.

ஆர்ச்சிக்கு முதல் பரிசை வழங்கியவர் Daimy Gommers என்ற ஏழு வயது குட்டிப்பெண். Daimy Gommersஇன் தந்தையான Paul (46) பாராசூட் விபத்தொன்றில் தனது கால் ஒன்றை இழந்தவர்.

இரண்டு ஆண்டுகளுக்குமுன் மேகனுடனான காதலை முதன்முதலில் ஹரி அறிவித்த டொராண்டோ Invictus விளையாட்டுக்களின் போது ஹரி Daimyயை சந்தித்தார்.

Daimy, ஆர்ச்சிக்கு முயல் படங்களால் அலங்கரிக்கப்பட்ட கிலுகிலுப்பை ஒன்றை பரிசாக வழங்கினார்.

அவளை கட்டியணைத்து தனது நன்றியை அவளுக்கு தெரிவித்துக் கொண்டார் ஹரி.

சைக்கிள் ஒன்றை ஓட்டும்போது 'I am daddy' என்று எழுதப்பட்ட சட்டையை அணிந்திருந்த இளவரசர் ஹரியிடம் நெதர்லாந்து இளவரசி Margriet, குட்டி இளவரசர் ஆர்ச்சிக்காக குட்டி சட்டை ஒன்றை பரிசாக வழங்கினார்.

இங்கே கடமையாற்ற அப்பா ஹரி திரும்பி விட்ட நிலையில், அங்கே பிரித்தானியாவில் குட்டி இளவரசர் ஆர்ச்சிக்கு அம்மா மேகனும் பாட்டி டோரியா ரக்லாண்டும் துணையாக இருக்கிறார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers