பிரித்தானியாவின் பிரபலமான பெயராக குட்டி இளவரசர் ஆர்ச்சியின் பெயர் இருக்குமாம்... இன்னும் எத்தனை ஆண்டுகளில் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள பிரபலமான பெயராக குட்டி இளவரசர் ஆர்ச்சியின் பெயர் அடுத்த ஆறு ஆண்டுகளில் இருக்கும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் தம்பதிக்கு பிறந்த குழந்தைக்கு ஆர்ச்சி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆர்ச்சி என்ற பெயர் பிரபலமாகி வருகிறது.

இந்நிலையில் ancestry.co.uk இணையதளத்தின் விஞ்ஞானிகளின் கூற்றுபடி ஆர்ச்சி என்ற பெயர் அடுத்த 6 ஆண்டுகளில், அதாவது 2025-ல் பிரித்தானியாவின் மிக பிரபலமான பெயராக இருக்கும் என கணித்துள்ளனர்.

தற்போது ஆர்ச்சி என்ற பெயர் பிரித்தானியாவின் 18-வது பிரபலமான பெயராக உள்ளது.

இந்த பெயர் 2022-ல் பிரபலமான பெயர்களின் பட்டியலில் முதல் 10 இடங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers