பிரித்தானிய இளவரசர் ஹரி தனது மகனை அறிமுகம் செய்யும்போது பயன்படுத்திய சில வார்த்தைகள், குட்டி இளவரசர் உண்மையில் எப்போது பிறந்தார் என்ற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.
பெற்றோரான மகிழ்ச்சியில் திளைத்திருந்த Harry (34)யும் Meghan (37)ம், புதனன்று தங்கள் மகன் ஆர்ச்சியை விண்ட்சர் மாளிகையில் உலகத்திற்கு அறிமுகப்படுத்தினார்கள்.
பையன் யாரைப்போல் இருக்கிறான் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹரி, பிள்ளைகள் இரண்டு வாரத்தில் அதிகம் மாற்றதிற்குள்ளாகும் என்று எல்லோரும் கூறுகிறார்கள், அதனால் இப்போதைக்கு இந்த கேள்விக்கு என்னால் சரியான பதிலைக் கூற இயலாது என்று கூறியிருந்தார்.
ஆனால் அவரது பதில் ராஜ குடும்ப ரசிகர்கள் பலரை குழப்பத்திற்குள்ளாகியிருக்கிரது.
தங்கள் குழந்தை இரண்டு வாரங்களில் அதிக மாற்றம் அடைந்து விட்டது என்று ஹரி கூறியதாக தவறாக புரிந்து கொண்ட பலர், அப்படியானால் குழந்தை பிறந்து 15 நாட்களாகி விட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஒருவர் ட்விட்டரில், ’எல்லோரும் இரண்டு வாரங்களில் குழந்தை மிகவும் மாறி விட்டதாக கூறுகிறார்கள்...’ அது திங்கட்கிழமைதானே பிறந்தது, அவர்கள் முகத்தில் காணப்படும் திகிலைப் பார்க்க வேண்டுமே, ஹரி உளறிக் கொட்டி விட்டார் என்று எழுதியுள்ளார்.
இன்னொருவர், ஹரி குழந்தை இரண்டு வாரங்களில் மாறிவிட்டது என்றுதானே இப்போது கூறினார் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையில் இன்னொருவர், நிச்சயமாக இளவரசர் ஹரி, குழந்தை இரண்டு வாரங்களில் மிகவும் மாறி விட்டது என்றுதான் கூறினார், அது நேற்று பிறந்தது போல்தானே இருக்கிறது என்று எழுதியுள்ளார்.
மற்றொருவரோ, குழந்தை எப்போது பிறந்தாலும் பரவாயில்லை, ஆனால் குழந்தை இரண்டு வாரங்களில் மிகவும் மாறி விட்டது என்று ஹரி சொன்னதை வேறு யாரும் கவனிக்கவில்லை என்பதைப் பார்க்கும்போது எனக்கு பைத்தியம் பிடிக்கும் போலிருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.