இளவரசி மேகன் கர்ப்பகாலத்தில் செலவிடப்பட்ட பணம் எத்தனை கோடிகள் தெரியுமா? கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகன் மெர்க்கல் குழந்தை பெற்றுள்ள நிலையில் அவர் கர்ப்பமானது முதல் குழந்தை பெற்ற வரை ஆன மொத்த செலவுகள் குறித்து தெரியவந்துள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி - மேகன் மெர்க்கல் தம்பதிக்கு திங்கட்கிழமை அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் குழந்தைக்கு ஆர்ச்சி ஹாரிசன் மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேகன் கர்ப்பமானது முதல் குழந்தை பெற்றது வரை £800,000 செலவு செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

அதன்படி மேகனுக்கு நியூயார்க்கில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு £154,000 செலவானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் உணவுகளுக்கு மட்டுமே அதிகளவில் பணம் செலவழிப்பட்டது. பின்னர் ஹொட்டலில் தங்க £57,400 பணம் செலவிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்காக பிரித்தானியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்ல தனியார் விமான செலவாக £77,000 செலவிடப்பட்டது.

கர்ப்பிணியாக இருந்த மேகன் எடுத்து கொண்ட அக்குபஞ்சர் சிகிச்சைக்கு £8,700 பணமும், கண்களை நீரால் கழுவி குளிர்விக்கும் சிகிச்சைக்கு £6,200ம் செலவிடப்பட்டது.

மேகன் அணிந்த துணிகளுக்கு மட்டும் £385,000 பணம் செலவானது, மேகனுக்கு பிரசவம் பார்க்கப்பட்ட மருத்துவமனையில் ஒரு இரவுக்கு £15,000 செலவானது.

மற்ற இதர செலவுகள் என மொத்தம் £800,000 மேகனின் கர்ப்பகாலத்தில் செலவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...