பிரித்தானியாவில் சரிந்து விழுந்த கட்டிடம்... பர்மிங்காம் தெருவில் படையெடுத்த வீரர்கள்

Report Print Basu in பிரித்தானியா

பிரித்தானியாவில் கட்டிடம் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் சிக்கி மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த நபர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பர்மிங்காம், ஹாக்லே விட்டோரியா தெருவில் உள்ள கட்டிடமே இவ்வாறு சரிந்துள்ளது. தகவலறிந்த பொலிசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவம் இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டிடத்தின் முன் பகுதியில் எந்த பாதிப்பும் ஏற்படாத நிலையில் உட்புறத்தில் அல்லது பின்னால் சரிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. எனினும், கட்டிடம் சரிந்ததற்கான காரணம் குறித்து அவசர சேவை அதிகாரிகள் சம்பவயிடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், விபத்து காரணமாக பொதுமக்கள் இப்பகுதியை தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சம்பவம் குறித்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...