ஹரி மேகன் குழந்தையை முதலில் சந்திக்கப்போவது யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும் தங்கள் குழந்தையை சற்றுமுன் உலகுக்கு அறிமுகம் செய்துள்ள நிலையில், முதல் முதலாக குட்டி இளவரசரை மகாராணியார் சந்திக்க இருக்கிறார்.

இன்று தங்கள் குழந்தையை மகராணியாரிடம் காட்டுவதற்காக ஹரி மேகன் தம்பதியர் விண்ட்சர் மாளிகைக்கு செல்ல இருக்கிறார்கள்.

இந்த செய்தியை அரண்மனை வட்டாரம் உறுதி செய்துள்ளது.

ஹரி மேகன் குழந்தை, அரியணை ஏறும் வரிசையில் எட்டாவதும், மகாராணியாரின் பேரப்பிள்ளைகளுக்கு பிறந்த எட்டாவது பேரனும் ஆகும்.

தற்போது தனக்கு மிகவும் பிடித்த நிகழ்வான Royal Windsor Horse Show என்னும் குதிரைக் கண்காட்சியைக் காண்பதற்காக மகாராணியார் Berkshire சென்றிருக்கிறார்.

ஆனால் தனது பேரக்குழந்தையைக் காண்பதற்காக அவர் நிகழ்ச்சியின் இடையில் ஒரு இடைவேளை எடுத்துக் கொண்டு வீடு திரும்ப இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers