அரச குடும்பத்தின் புதுவரவை காண ராணியார் எப்போது செல்கிறார்: அரண்மனை வெளியிட்ட புதிய தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இளவரசர் ஹரி மேகன் தம்பதிகளுக்கு பிறந்த குழந்தையை காண எலிசபெத் ராணியார் நாளை அரண்மனைக்கு புறப்படு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகளுக்கு உள்ளூர் நேரப்படி காலை 5.26 மணியளவில் ஆண் குழந்தை பிறந்தது.

தங்கள் குடியிருப்பிலேயே பிள்ளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை மேகன் மெர்க்கல் தெரிவித்திருந்த நிலையில்,

தற்போது லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவருக்கு பிரசவம் நடந்துள்ளது.

ஆனால் எந்த மருத்துவமனை என்ற தகவலை இதுவரை அரண்மனை வட்டாரங்கள் பாதுகாப்பு கருதி வெளியிடவில்லை.

மட்டுமின்றி மேகன் மெர்க்கலை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது மிக மிக ரகசியமாக பாதுகாக்கப்பட்டதாகவும்,

அரண்மனையின் முக்கிய நிர்வாகிகளுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை என தற்போது கூறப்படுகிறது.

பிரித்தானிய அரச பரம்பரையில் பிறந்த புதிய வாரிசை காண நாளை ராணியார் அரண்மனைக்கு செல்ல இருப்பதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers