தாயான பிரித்தானியா இளவரசி மேகனுக்கு லண்டனில் வித்தியாசமான வாழ்த்து... வைரலாகும் வீடியோ

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசி மேர்கனுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்திருக்கும் நிலையில், லண்டனில் உள்ள டவரில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

பிரித்தானியா இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி (35). இவர் தனது காதலி மேகனை (38) கடந்த ஆண்டு மே மாதம் 19-ஆம் திகதி மணந்தார்.

இந்நிலையில், முன்னாள் ஹாலிவுட் நடிகையான இளவரசி மேகனுக்கு இன்று உள்ளூர் நேரப்படி காலை 5.26 மணியளவில் ஆண் குழந்தை பிறந்ததாகவும் 7 பவுண்டுகள் எடையில் குழந்தை அழகாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை அறிந்த பிரித்தானியா மக்கள் தங்கள் வாழ்த்துக்களை வித்தியாசமான முறையில் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் BT Group-நிறுவனத்திற்கு சொந்தமான தலைநகர் லண்டனில் இருக்கும் BT Tower-ல் ஆண்குழந்தை பிறந்துள்ளது வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers