பிரித்தானிய இளவரசி மேகனுக்கு ஆண் குழந்தை பிறந்தது! உற்சாகத்தில் இளவரசர் ஹரி

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகனுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதா அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இளவரசி மேகன் பிரசவ வலியின் காரணமாக இன்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு அதிகாலை 5.26 மணிக்கு 3.2கிகி எடையில் ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ள இளவரசர் ஹரி, "எனக்கும் என்னுடைய மனைவிக்கு ஆரோக்கியமான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது என்பதை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். என் மனைவியை நினைத்து நான் பெருமைப்படுகிறேன் என தெரிவித்துள்ளார்.

குழந்தையின் பாலினம் குறித்து கண்டுபிடிக்க முடியாமல் இருந்த ஹரி மற்றும் மேகன் தற்போது பெரும் ஆச்சர்யத்தில் உறைந்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers