பிரித்தானிய இளவரசி மேகனுக்கு பிரசவ வலி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகனுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ள செய்தியை கென்சிங்டன் அரண்மனை உறுதி செய்துள்ளது.

மேகன் மெர்க்கலுக்கு இன்று காலை பிரசவ வலி ஏற்பட்டதாகவும், அது தொடர்பான செய்திகளை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேகனின் அருகிலேயே இளவரசர் ஹரி இருப்பதாகவும் சீக்கிரத்தில் ஒரு அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிக்கை ஒன்றில் அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

பிறக்கும் குழந்தை, ஹரி மேகன் தம்பதியரின் முதல் குழந்தையும் அரியணை ஏறும் வரிசையில் ஏழாவதானதும் ஆகும்.

அந்த குழந்தை மகாராணியாரின் பேரக்குழந்தையின் குழந்தையான எட்டாவது பேரப்பிள்ளை ஆகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers