Brexit குறித்து எதிர்க்கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் முன் பிரித்தானிய பிரதமர் ரகசிய ஆலோசனை?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய பிரதமர், எதிர்க்கட்சித் தலைவருடன் மீண்டும் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு முன் இரண்டாவது வாக்கெடுப்பு தொடர்பாக ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய பிரதமர் தெரஸா மே, மீண்டும் எதிர்க்கட்சி தலைவரான ஜெரமி கார்பினுடன் பிரெக்சிட் தொடர்பான பேச்சு வார்த்தைகளை தொடர உள்ளார்.

ஆனால் அதற்கு முன், இரண்டாவது வாக்கெடுப்பு குறித்து அவர் ஒரு ரகசிய ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மேயும் அவரது சகாக்களும் வாக்கெடுப்புக்கு ஒரு மூன்று வழி திட்டம் ஒன்றை முன் வைத்துள்ளதாக தெரிகிறது.

அதாவது, பிரெக்சிட்டை ஒப்பந்தம் ஒன்றுடன் நிறைவேற்றுவதா, ஒப்பந்தங்கள் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்திலேயே இருந்து விடுவதா என மூன்று கேள்விகளுடன் வாக்கெடுப்பை நடத்த திட்டம் இருக்கிறது.

நாளை ஆளுங்கட்சியின் மூத்த அமைச்சர்கள், ஜெரமி கார்பின் மற்றும் அவரது மூத்த அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த இருக்கும் நிலையில், லேபர் கட்சிக்குள்ளேயே வாக்கெடுப்பு தொடர்பாக இரு வித கருத்துக்கள் நிலவுகின்றன.

ஒரு பிரிவினர் தெரஸா மேயின் ஒப்பந்தத்தை எதிர்க்கிறார்கள், இன்னொரு பிரிவினர் ஆதரிக்கிறார்கள்.

சென்ற வாரம் நடந்த தேர்தலை மேற்கோள் காட்டி, வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் லேபர் கட்சி சரியான அடிவாங்கியுள்ளது, அங்கிருப்பவர்கள் முந்தைய வாக்கெடுப்பில் வாக்களித்தவர்கள், அதுவும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என வாக்களித்தவர்கள் என்கிறார் ஒப்பந்தத்தை ஆதரிப்பவர்களில் ஒருவரான Caroline Flint.

நாம் அவர்கள் வாக்களித்ததை மதிக்கிறோம் என்பதைக் காட்ட வேண்டும், இல்லையென்றால் அவர்கள் இன்னொருமுறை நாம் சொல்வதை கேட்கமாட்டார்கள் என்கிறார் Caroline Flint.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers