பிரித்தானியாவில் சம்பளம் போதவில்லை என்பதால் பொலிசார் இதை செய்கிறார்களாம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவின் சில பகுதிகளில் சம்பளம் போதாத பொலிசார் பகுதி நேர வேலை செய்கிறார்களாம்.

இரண்டாவதாக ஒரு வேலையை செய்தால் மட்டுமே அவர்களுக்கு தங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள போதுமான பணம் கிடைப்பதாக தெரிகிறது.

சில பொலிசார் பகுதி நேர ஓட்டுநர்களாக பணியாற்றுகிறார்கள், வேறு சிலர் டெலிவரி பாய் ஆக பணிபுரிகிறார்கள்.

Norfolkஐச் சேர்ந்த ஒரு பொலிஸ் அதிகாரி பலூன் பைலட்டாக பணியாற்றுகிறாராம். வீடுகளின் புகைப்போக்கியை சுத்தமாக்கும் வேலையை செய்யவும் பொலிசார் ஒருவர் தயங்கவில்லை.

Cheshire, Essex மற்றும் தெற்கு வேல்ஸ் ஆகிய பகுதிகளில்தான் இப்படி சம்பளத்திற்காக இரண்டாவது வேலையைத் தேடும் பொலிசாரின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.

பொலிசார் பணிபுரியும் பணிப்பிரிவு அனுமதித்தால் அவர்களுக்கு இரண்டாவது வேலையை செய்ய அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers