இந்த அழகிய பெண்ணை எல்லோரும் தவறாக நினைக்கிறார்களாம்: உண்மையில் இவர் யார் தெரியுமா?

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கதவைத் தட்டி வேலைக்கு வந்திருக்கும் இந்த பிரித்தானிய பெண்ணை எல்லாரும் மொடல் என்று நினைத்துக் கொள்கிறார்களாம்.

Creweவைச் சேர்ந்த Carly Gayle (30), 15 வயது முதல் பிளம்பராக பணிபுரிந்து வருகிறார்.

ஆனால் அவர் இருக்கும் அழகுக்கு, அவரை ஒரு மொடல் என்று எண்ணிக் கொள்ளும் மக்கள் எங்கே உங்களுடன் வந்த ஆண் என்று கேட்கிறார்களாம்.

தன் கல்லூரியில் படித்த 200 மாணவர்களில் இரண்டே பேர்தான் பெண்கள் என்கிறார் Carly.

ஆண்டுக்கு 36,000 பவுண்டுகள் சம்பாதிக்கும் Carlyக்கு ஒரே ஒரு வருத்தம்தான், அது பாலின ரீதியான தாக்குதல்கள்.

ஒரு அழகான பெண் எப்படி பிளம்பர் வேலை செய்ய முடியும், வேண்டுமென்றால், யாரோ ஒரு ஆண் பிளம்பருடன் பணிபுரியும் உதவியாளராக இருக்க முடியும் என மக்கள் நினைக்கிறார்களாம்.

அதேபோல், அவரால் பிளம்பர் வேலை செய்ய முடியுமா, முறையாக தொழில் கற்றிருக்கிறாரா என சந்தேகிப்பவர்கள் முன் தன் அடையாள அட்டையை எடுத்து காட்ட வேண்டியிருக்கிறதாம் Carlyக்கு.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...