ராஜ மரியாதையுடன் சாலையில் பயணித்த கார்: மேகனின் குழந்தை என மக்கள் எண்ணியதால் பரபரப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ராஜ மரியாதையுடன் பாதுகாவலர்கள் படை சூழ பயணித்த ஒரு காரைக் கண்ட மக்கள், அது மேகன் பயணிக்கும் கார் என கருதியதால் இளவரசர் ஹரி, மேகனுக்கு குழந்தை பிறந்து விட்டதோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.

Berkshire நகரில் Bentley கார் ஒன்று பாதுகாவலர்கள் படை சூழ பவனி வந்தது. பொலிசார் சாலையில் பயணித்த வாகனங்களை எல்லாம் சாலையின் ஓரமாக நிறுத்தச் சொன்னார்கள்.

அப்போது, ஜன்னல்கள் உட்புறம் இளஞ்சிவப்பு நிற திரையால் மூடப்பட்ட ஒரு Bentley கார் ஸ்பீட் பிரேக்கர்கள் இருக்கும் இடங்களில் குலுங்காமல் மெதுவாக சென்றதை Tamoor Ali (37) என்ற நபர் கவனித்தார்.

இவ்வளவு மெதுவாக கார் செல்ல வேண்டுமானால் அதிர்வுகளை தாங்க இயலாத யாரோ காருக்குள் இருக்க வேண்டும், அப்படியானால் காருக்குள் ஒரு குழந்தை உள்ளது என எண்ணிய Ali, அது மேகனின் குழந்தையாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

அங்கிருந்த பொதுமக்கள் பலரும் அப்படித்தான் நினைத்தார்கள். ஆனால் அந்த காரில் பயணித்தவர் மகாராணி என்றும், அவர் புனித ஜார்ஜ் சிற்றாலயத்தில் நடைபெற இருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றார் என்றும் அரண்மனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத துவக்கத்தில் இளவரசி மேகனுக்கு குழந்தை பிறக்கும் என அறிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருப்பதால் இப்படிப்பட்ட குழப்பங்கள் அவ்வப்போது நடப்பது ஒரு தொடர்கதையாகி விட்டது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers