மக்களுக்கு மிகவும் பிடித்த குட்டி இளவரசி சார்லட்டுக்கு இன்று பிறந்தநாள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் வில்லியம், இளவரசி கேட்டின் மகள் சார்லட், இன்று தனது நான்காவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

மக்களுக்கு மிகவும் பிடித்த குட்டி இளவரசி சார்லட்டின் பிறந்த நாளுக்காக இன்று அவரது புகைப்படங்கள் சில அரண்மனை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை எடுத்தவர் புகைப்டக் கலையில் மிகுந்த ஆர்வம் காட்டும் சார்லட்டின் தாய் இளவரசி கேட்!

இந்த புகைப்படங்கள் இளவரசர் வில்லியம் குடும்பத்துடன் வசிக்கும் கென்சிங்டன் மாளிகையிலும் ஆன்மர் ஹாலிலும் எடுக்கப்பட்டவை ஆகும்.

ஒரு இளவரசி என்கிற தோரணையின்றி, மிகவும் சாதாரணமான ஒரு உடையில் எளிமையான தலையலங்காரத்துடன் இருந்தாலும், சார்லட்டின் முகத்தில் தெரியும் ராஜ கலையை மறைக்க முடியுமா என்ன!

இளவரசி கேட் ஆனாலும் சரி, இளவரசி மேகன் ஆனாலும் சரி, தங்கள் பிள்ளைகள் சாதாரண குடிமக்களின் பிள்ளைகள் போலவே வளர்க்கப்படவேண்டும் என்று விரும்புவது குறிப்பிடத்தக்கது.

குட்டி இளவரசி சார்லட், 2015ஆம் ஆண்டு மே மாதம் 2ஆம் திகதி புனித மேரி மருத்துவமனையில் பிறந்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers