சீஸ் துண்டால் பறிபோன 13 வயது பிரித்தானிய சிறுவனின் உயிர்: வெளிவரும் பின்னணி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் பால் தொடர்பான பொருட்களால் ஒவ்வாமை கொண்ட சிறுவன், சக மாணவன் ஒருவனால் வீசப்பட்ட சீஸ் துண்டால் பரிதாபமாக மரணமடைந்த சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது.

மேற்கு லண்டனில் உள்ள கிரீன்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் வைத்தே சிறுவன் மீது இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28 ஆம் நாள், கரண்பிர் சிங் ஷீமா என்ற 13 வயது சிறுவன் மீது சக மாணவன் சீஸ் துண்டை வீசியுள்ளான்.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட கரண், உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டான். மருத்துவமனையில் சேர்ப்பித்த 10 நாட்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி உறவினர்கள் முன்னிலையில் சிறுவன் கரண் மரணமடைந்துள்ளான்.

இந்த விவகாரம் தொடர்பில் இன்று கொரோனெர்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சிறுவன் கரணுக்கு பால் பொருட்கள் தொடர்பில் ஒவ்வாமை இருப்பது அவரது சக மாணவர்கள் பெரும்பாலானோருக்கு தெரியும் என கூறப்படுகிறது.

தெரிந்திருந்தே சக மாணவன் ஒருவன் விளையாட்டாக சீஸ் துண்டு ஒன்றை கரண் மீது வீசியுள்ளான். அதே வேளை, இன்னொரு மாணவன், கரணுக்கு ஒவ்வாமை இருப்பதையும் கத்திக் கூறியுள்ளான்.

Great Ormond Street மருத்துவமனையில் 10 நாட்கள் உயிருக்கு போராடிய கரண், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தான்.

பால் பொருட்களால் ஒவ்வாமை இருப்பது தெரியும் என கூறிய அந்த சிறுவன், இதனால் கரணின் நிலை இவ்வளவு மோசமாக போகும் என அறிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளான்.

இந்த விசாரணையானது அடுத்த 3 நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers