லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கோடீஸ்வரர்... நீதிமன்ற விசாரணையில் நடப்பது என்ன?

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இந்திய கோடீஸ்வரர் நிரவ் மோடியின் மீது மூன்றாவது ஜாமின் மனு வரும் 8-ஆம் திகதி லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்தியாவின் மும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன்பெற்று இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார்.

அதன் பின் ஒவ்வொரு நாட்டிற்கு சென்ற இவர், பிரித்தானியா தலைநகர் லண்டனில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து லண்டனில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பின் ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.

மேலும் இந்தியாவுக்கு நாடுகடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும் நிலையில் அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியின் இரண்டாவது ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்தது.

இந்த மனு விசாரணையின் போது, சிறையில் இருந்த நிரவ் மோடி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் மனுத்தாக்கல் செய்ய, அந்த மனுவையும் தள்ளுபடி செய்த நீதிபதி எம்மா அர்புத்நாட் வழக்கின் மறுவிசாரணையை மே 24-ஆம் திகதிக்கு ஒத்திவைத்துடன், நிரவ் மோடியின் சிறைக்காவலையும் மே 24-ஆம் திகதி வரை நீடித்து உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், நிரவ் மோடியின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்றாவது ஜாமின் மனு மீது வரும் 8-ம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers