இலங்கை குண்டுவெடிப்பு: இறந்துபோன உறவுகளின் உடல்களை சொந்த நாட்டிற்கு எடுத்த செல்ல முடியாமல் தவிக்கும் உறவுகள்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

இலங்கையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 8 பிரித்தானியர்கள் உயிரிழந்துள்ள நிலையில் இறந்தவர்களின் உடலை நாட்டுக்கு கொண்டுவர முடியாமல் வேதனையுடன் உறவினர்கள் காத்திருக்கின்றனர்.

இலங்கை தற்கொலைப்படை தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் ஏற்பட்ட குளறுபடியால் 359 ஆக இருந்த எண்ணிக்கை 253 பேர் என குறைத்து பாதுகாப்பு துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கையில் உயிரிழந்த பிரித்தானியர்களின் சடலங்கள் உறுதிப்படுத்தப்பட்டாலும், அவர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டு செல்வதற்காக உறவினர்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.

உடல்களை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கு முன்னர் அடையாளங்களை உறுதிப்படுத்துவதற்காக நான்கு வகை செயல்முறைளை மேற்கொள்ள வேண்டும் என இன்டர்போல் பரிந்துரைத்துள்ளது.

இறந்துபோன தங்களது உறவுகளின் முகத்தினை அடையாளம் காண்பித்தாலும் டிஎன்ஏ பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு இரண்டு உடல்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கடுமையான நடவடிக்கையால் உறவுகளின் உடல்களை கொண்டு செல்வதற்கு பிரித்தானிய நாட்டினர் வேதனையுடன் காத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers