பாலியல் உறவின் போது ஜூலியன் அசாஞ்சே உளவு பார்க்கப்பட்டாரா? அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள ஈக்வேடார் நாட்டுத் தூதரகத்தில் பல ஆண்டுகளாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே வேவு பார்க்கப்பட்டதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கைகளிலிருந்து தப்ப லண்டனில் உள்ள ஈக்வேடார் நாட்டுத் தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சமடைந்தார்.

7 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை அன்று ஈக்வேடார் நாட்டுத் தூதரகத்திலிருந்து லண்டன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

ஈக்வேடார் நாட்டுக்கும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கும் கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு இருந்ததே, இந்த திடீர் கைதுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போதைய விக்கிலீக்ஸ் முதன்மை ஆசிரியர் Kristinn Hrafnsson பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஈக்வேடார் நாட்டுத் தூதரகத்தில் வைத்து ஜூலியன் அசாஞ்சே பல மாதங்களாக வேவு பார்க்கப்பட்டு வந்துள்ளார் என்றார்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பாக ஏராளமான காணொளி காட்சிகள், ஓடியோ பதிவுகளும் அவர்களிடம் சிக்கியிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதில், அசாஞ்சேவின் மருத்துவ பரிசோதனைகள் மட்டுமின்றி, அவரிடம் விவாதிக்கப்பட்ட சட்ட நுணுக்கங்களும் உள்ளடங்கும் என்றார்.

இந்த ஆதாரங்கள் அனைத்தும் டிரம்ப் நிர்வாகத்திடம் மிக விரைவில் கைமாற வாய்ப்புள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும், அசாஞ்சேவின் பாலியல் உறவு தொடர்பான காணொளிகளும் அதில் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே சில உளவாளிகள் விக்கிலீக்ஸ் நிறுவனத்திடம் 3 மில்லியன் டொலர் கேட்டு தொடர்பு கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு அசாஞ்சே நாடு கடத்தப்படலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆனால் அசாஞ்சேவின் வழக்கறிஞர் ஜெனிபர் ராபின்சன் கூறுகையில், ஸ்வீடன் நாட்டில் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்று கூறப்பட்டு வருகிறது.

இதுதொடர்பான விசாரணையில் நாங்கள் தைரியமாகப் பங்கெடுத்து ஸ்வீடன் அதிகாரிகளுக்குத் தகுந்த ஒத்துழைப்பு அளிப்போம்.

ஆனால், அமெரிக்காவின் நாடு கடத்தல் படலத்திற்கு எதிராகக் கடுமையாகப் போராடுவோம் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers