பிரித்தானியாவில் பெரும் விபத்தில் சிக்கிய 2 அடுக்கு பேருந்து: ஒருவர் பலி.... 22 பேர் படுகாயம்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவின் நியூபோர்ட் பகுதியில் உள்ள சாலையில் கார்கள் மீது 2 அடுக்கு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில், ஒருவர் பலியானதோடு, 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நியூபோர்ட் பகுதியில் உள்ள சாலையில் 2 அடுக்கு பேருந்து ஒன்று, அப்பகுதி வழியாக வந்த இரண்டு கார்களின் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளது.

உள்ளூர் நேரப்படி மதியம் 12.45 மணிக்கு நடந்த இந்த விபத்தில், காரில் பயணம் செய்த 60 வயது பெண் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மேலும் அதில் இருந்த 2 பேர் கவலைக்கிடமான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம் பேருந்து ஒட்டி வந்த ஓட்டுனரின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நடந்ததை அடுத்து, 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் 15 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் சிக்கியிருப்பவர்களை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு வருகின்றனர். செயின்ட் மேரி மருத்துவமனையிலிருந்து இன்னும் உதவியாளர்களை பொலிஸார் நாடியிருக்கின்றனர்.

விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தெரியவில்லை, விசாரணை நடைபெற்று வருகிறது. பேருந்து ஓட்டுநர் மீது தவறு இருப்பதாகவே எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இதுவரை 22பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்