Brexit: தன்னை குற்றம் சாட்டிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு சுடச்சுட பதிலளித்த பிரதமர்: அதிகம் பார்க்கப்பட்ட ஒரு வீடியோ!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரெக்சிட்டை எப்படியாவது நிறைவேற்றிவிட பிரதமர் தெரஸா மே முயன்று வரும் நிலையில், அவரது சகாக்களே அவரை குற்றம் சாட்ட, சரியான பதிலடி கொடுத்தார் மே.

Henry Smith என்னும் நாடாளுமன்ற உறுப்பினர் இன்னும் ஒரு ஆண்டிற்கு பிரெக்சிட்டை நீட்டிப்பதால், பிரித்தானிய அரசுக்கு மேலும் ஒரு பில்லியன் பவுண்டுகள் செலவு பிடிக்கும் என பிரதமர் தெரஸா மேயை குற்றம் சாட்டும் தொனியில் கூறினார்.

அந்த பணம் இருந்தால் அதை பள்ளிகள், பொலிஸ் துறை மற்றும் வரிச்சலுகைகளுக்கு பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

அவர் சொல்லி முடித்து அமர்வதற்குள் வேகமாக எழுந்த மே, அவரை திரும்பிப் பார்த்து, கண்களைச் சுருக்கி, உண்மையில் இப்போது நாம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருக்க வேண்டும், என்னுடைய ஒப்பந்தம் மட்டும் நாடாளுமன்றத்தில் நிறைவேறியிருந்தால் என்றார்.

அது Henry Smithக்கு மட்டும் சொல்லப்பட்ட பதிலாக இல்லாமல் அவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லோருக்குமான பதிலாக இருந்தது.

நீங்கள் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் நான் இன்று பிரஸ்ஸல்சுக்கு செல்ல வேண்டிய அவசியமே வந்திருக்காது என்றார் மே.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers