தாய்ப்பால் கொடுக்கும்போதெல்லாம் கண்ணீர் வடிக்கும் பிரித்தானிய தாய்!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தன்னுடைய குழந்தைக்கு மகிழ்ச்சியாக தாய்ப்பால் கொடுக்க முடியாமல் அவஸ்தையடையும், பிரித்தனையா தாய் ஒருவர் விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறார்.

பிரித்தானியாவை சேர்ந்த டீனா டாட் என்கிற 31 வயது பிரித்தானிய தாய், இரண்டாவது குழந்தை பிறந்தது முதலே வினோதமான ஒரு அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரித்தானிய மக்களில் அதிகமானோர் இதுகுறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லாதால், மருத்துவ விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் தனக்கு நடந்ததை பற்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததும் மருத்துவமனையில் இருந்த போது தான் அந்த அனுபவம் எனக்கு முதன்முதலாக கிடைத்தது.

நான் என்னுடைய குழந்தை பருவத்தில் முதன்முறையாக பள்ளிக்கு செல்வதை போல உணர்ந்தேன். அடுத்த சில நாட்களில் தான் பயங்கரமான ஒரு உணர்ச்சியை உணர்ந்தேன். என்னுடைய குழந்தை இஷாவிற்கு பால் கொடுக்க முயலும் போதெல்லாம் ஒருவிதமான பயமும், கவலையும் என்னுடனே இருந்தது. உணர்ச்சிகள் அதிகரித்தது.

அதை மற்றவர்களிடம் விளக்கி கூற எனக்கு கடினமாக இருந்தது. மற்ற தாய்மார்களிம் நான் கூறும்போது, குடும்பத்தில் வளர்ந்த ஒரு நாயை கொலை செய்வதை போல இருப்பதாக விவரித்தேன்.

அதற்கு பிறகு எப்பொழுதெல்லாம் என்னுடைய மகளுக்கு தாய்ப்பால் கொடுக்கிறானோ, அந்த சமயங்களில் எல்லாம் மனசோர்வும், கவலையும் அதிகரித்தது.

தாய்ப்பால் கொடுப்பது தவறு என்பதை போல உணர்ந்தேன். அந்த உணர்வுகள் எனக்கு அதிகரிக்கும்பொழுது கண்ணீர் வர ஆரம்பித்துவிடும்.

நான் என் மகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என்று எனக்கு தெரியும். ஆனால் அந்த உணர்ச்சிகளால் நான் கவலையடைந்தேன்.

குழந்தை பெற்றெடுத்த பெண்களுக்கு வரும் மனஅழுத்தம் என்று தான் நாங்கள் முதலில் நினைத்திருந்தோம். ஆன்லைனில் தேடிப்பார்த்து பிறகு தான், பால் வெளியேற்றம் எதிர்வினை எனப்படும் D-MER-ஆல் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை தெரிந்துகொண்டேன்.

இது ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் காரணமாக பால் வெளியிடும் மார்பகங்களுக்கு முன்பு டிஸ்போரியாவின் தீவிர உணர்ச்சிகளை உணர வைக்கும். குழந்தை பிறந்த 8 மாதங்களுக்கு பிறகு தான் இந்த அறிகுறிகளை சந்தித்தேன் என்பதை உறுதி செய்தேன்.

நான் ஒரு தாய் என்பதை உணர முடியாதபடி D-MER என்னை தடுத்தது. ஒருமுறை அது ஒரு சாதாரணமானது தான் என்பதை உணர்ந்தேன். அதிலிருந்து தற்போது நான் மீண்டுவிட்டேன்.

இதுகுறித்து தாய்மார்களுக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன். D-MER என்னை ஒரு கெட்ட தாய் போல் தோன்றவைத்தது.

இந்த நிலையில் பிரச்சனை என்னவென்றால், யாரும் இதைப்பற்றி எதுவும் அறிந்திருக்கவில்லை, நான் தான் முதன்முதலில் அறிந்திருப்பதாக நினைக்கிறேன். இதனை பற்றிக் கூறும் போது மருத்துவர்கள் கூட முக்கியமானதாக கருதாமல், கேட்க மறுத்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers