லண்டனில் இருந்து விஜய் மல்லையா நாடு கடத்தல்?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

லண்டனிலிருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கோரிய இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மனுவை லண்டன் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

இந்திய வங்கிகளில் சுமார் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, தொழிலதிபர் மல்லையா லண்டனில் குடியேறினார்.

அவரை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல அங்குள்ள சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தன.

இந்த நிலையில், மல்லையாவை நாடு கடத்தலாம் என லண்டன் நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 10ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.

மட்டுமின்றி மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பில் பரிசீலனை மேற்கொள்ள பிரித்தானியாவின் உள்விவகாரத்துறை அமைச்சகத்துக்கு நீதிமன்றம் பரிந்துரை செய்திருந்தது.

இதனையடுத்து மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க, பிரித்தானிய உள்விவகாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்தது. ஆனால் இந்த அனுமதியை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மல்லையாவுக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து விஜய் மல்லையாவும் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், லண்டன் நீதிமன்றம் விஜய் மல்லையாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அதனால், அவர் விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...