மேகன் உண்மையில் கர்ப்பமாக இல்லை, அவரது கர்ப்பம் பொய்யானது: அதிர்ச்சி குற்றச்சாட்டு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன் இன்னும் சில வாரங்களில் தனது முதல் குழந்தையை பெற்றெடுக்க இருக்கும் நிலையிலும், அவரது கர்ப்பம் போலியானது என்று கூறும் செய்திகள் சில சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த சமூக ஊடக சேனல்களை பல்லாயிரக்கணக்கானோர் தவறாமல் பார்வையிடுகிறார்கள், ஆயிரக்கணக்கானோர் பின் தொடர்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட நபர் தினமும் மேகனை விமர்சித்து யூடியூப் சேனலில் வெளியிடும் செய்திகளை 30,000பேர் சப்ஸ்கிரைப் செய்கிறார்கள்.

மேகன் கர்ப்பமாக இல்லை என்பதற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக கோரும் ஒரு வீடியோவை 200,000 பேர் பார்த்திருக்கிறார்கள்.

மேகன் உண்மையில் கர்ப்பம் இல்லை, அவர் செயற்கையாக மேடிட்ட வயிறு போல் ஒன்றைச் செய்து மக்களை ஏமாற்றுகிறார் என்று அந்த சேனல் சொல்வதைக் கேட்கவே ஒரு மாதிரியாக இருந்தாலும், அதையும் ஏராளமானோர் பின்பற்றுவதோடு, ஒருவர், இந்த மேகன் எல்லாரையும் ஏமாற்றுகிறாரே, எவ்வளவு மோசம் என்று ட்வீட் வெளியிட்டிருக்கிறார்.

இன்னொருவர், இது எவ்வளவு போலியானது, மேகன் உண்மையாகவே கர்ப்பமாக இருந்தால், இப்படியா கொஞ்சமும் அக்கறையின்றி தனது வயிற்றைக் காட்டிக் கொண்டிருப்பார், இது ஏமாற்று வேலை என்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்