வெறும் ஆறு மணிநேரம்: உலக சாதனை படைத்த பிரித்தானிய இளவரசர்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் தம்பதியினர் தொடங்கிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 6 மணிநேரத்தில் மில்லியன் பாலோயர்கள் குவிந்ததன் மூலம் உலக கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை @sussexroyal என்ற பெயரில் புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கினர்.

அதில், எங்களது அதிகாரப்பூர் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு வரவேற்கிறோம். பணிகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் ஒளி பிரகாசிக்கும் வாய்ப்புகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என முதல் பதிவை வெளியிட்டனர்.

இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கிய 6 மணிநேரங்களில் மில்லியன் பாலோயர்கள் குவிந்ததன் மூலம் கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர்.

இந்த சாதனையின் மூலம் தென் கொரிய பாப் பாடகர் கங் டேனியல் சாதனையை முறியடித்துள்ளனர். ஜனவரி மாதம் கங் டேனியல் தொடங்கிய இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு 12 மணிநேரத்தில் 1 மில்லியன் பாலோயர்கள் குவிந்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers