மேகனுக்கு மகாராணி தடை: இளவரசர் ஹரி அப்செட்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவிக்கு சில ராஜ நகைகளை அணிவதற்கு பிரித்தானிய மகாராணி தடை விதித்துள்ளதால் ஹரி அப்செட் ஆகியிருப்பதாக அரண்மனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

ராஜ குடும்ப நகைகள் சிலவற்றை பயன்படுத்துவதற்கு மகாராணியார் மேகனுக்கு தடை விதித்துள்ளதாக இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

சில நேரங்களில் அந்த நகைகளில் சிலவற்றை மகாராணியார் இரவலாக கொடுப்பதுண்டு. இனி அவற்றை மேகனுக்கு கொடுக்கமுடியாது என்று மகாராணியார் கூறிவிட்டாராம்.

இளவரசர் ஹரியை மணந்தபின், மேகன் பிடிவாதம் பிடிப்பதாகவும், ஹரியும் தனது உதவியாளர்களிடம், மேகனுக்கு என்ன வேண்டுமோ அது கிடைத்தாக வேண்டும் என்று கூறியதும் மகாராணியாரின் காதுகளுக்கு எட்ட, அவை அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தின.

சில ஒழுங்கு முறைகளை ராஜ குடும்பத்தார் கடைப்பிடிப்பது அவசியம் என்பதால் இனி மேகன் அந்த நகைகளை உபயோகப்படுத்தக்கூடாது என மேகனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேகன் எல்லா ராஜ குடும்ப நகைகளையும் பயன்படுத்துவது பக்கிங்காம் அரண்மனைக்கு பிடிக்கவில்லை என அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.

இனி ஒருபோதும் மேகனுக்கு ராஜ குடும்ப நகைகள் இரவலாக கொடுக்கப்படாது என்றில்லை, எதிர்காலத்தில் இது மாறலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

போன மாதம் ஒரு குறிப்பிட்ட கிரீடத்தை மேகன் அணிவதற்கு இளவரசர் சார்லசும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் நாடுகளுக்கு செல்லும்போது அந்த கிரீடத்தை மேகன் கேட்டதாகவும், அந்த நாடுகளில் அந்த கிரீடத்தை அணிவது தவறாக பார்க்கப்படும் என்பதாலேயே சார்லஸ் அதைக் கொடுக்கவில்லை என்றும் தெரிகிறது.

ஆனால் இதெல்லாம் ராஜ குடும்பத்திற்கு புதியவரான மேகனுக்கு புரியாது என்பதால், அந்த கிரீடத்தை அணிவது சரியாக இருக்காது என்று மட்டும் சார்லஸ் மேகனிடம் கூறிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers