அம்மாக்கள் தயாரித்த ஆபாசப்படம்: பிள்ளைகளின் ரியாக்‌ஷன்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிள்ளைகள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதற்காக ஐந்து அம்மாக்கள் சேர்ந்து ஆபாசப்படம் எடுத்த செய்தி நினைவிருக்கலாம்.

ஆபாச படங்கள் போலியான விடயங்களைக் காட்டுவதாகவும், பெண்களை ஆண்கள் மோசமாக நடத்துவதாக காட்டுவதாகவும் கூறி, உண்மை நிலை என்ன என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்துவதற்காக ஐந்து அம்மாக்கள் சேர்ந்து ஆபாசப்படம் தயாரித்தனர்.

அந்த படத்தின் கடைசி எபிசோட், படத்தை தயாரித்த அம்மாக்கள், அவர்களது உறவினர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு போட்டுக் காட்டப்பட்டது.

படத்தைப் பார்த்த பிள்ளைகள் உட்பட பலரும் அசௌகரியமாக உணர்ந்ததோடு, இருக்கைகளில் உட்கார்ந்து நெளிந்தனர். சிலர் தங்கள் தலைகளை குனிந்து கொண்டனர்.

இந்த விடயத்தை கேள்விப்பட்ட பலர் ட்விட்டரில் வெளுத்து வாங்கினர். அம்மாக்கள் தயாரித்த படத்தை பிள்ளைகளும் சேர்ந்து பார்த்தார்களா? இது என்ன அசிங்கம் என்று ஒருவர் ட்வீட்டினார்.

இன்னொருவர், ஐயையோ மகளுடன் சேர்ந்து இந்த மாதிரி படத்தைப் பார்க்க என்னாலெல்லாம் முடியாது என்று ட்வீட்டினார்.

அம்மாக்கள் தயாரித்த ஆபாச படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிகின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers