ஓன்லைன் விளையாட்டில் பல ஆயிரம் பவுண்டுகள் அள்ளிய பிரித்தானிய தாயார்: காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஓன்லைன் விளையாட்டில் பல ஆயிரங்களை வென்ற தாயார் ஒருவருக்கு அந்த பணத்தை அளிக்க முடியாது என தொடர்புடைய நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் ஸ்டோக்-ஆன்-டிரெண்ட் நகரில் குடியிருந்து வருபவர் 42 வயதான டோனா கீலிங்.

இவர் தற்போது ஓன்லைன் விளையாட்டு நிறுவனத்துடன் போராடி வருகிறார். 25 பவுண்டு கட்டணத்தில் விளையாடிய அவருக்கு 13,000 பவுண்டுகள் பரிசு கிடைத்துள்ளது.

ஆனால் டோனா, தமது மகனின் கடன் அட்டையை பயன்படுத்தி ஓன்லைன் விளையாட்டில் ஈடுபட்டதால், வெற்றிபெற்ற தொகையை வழங்க அந்த நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று வெற்றிபெற்ற தமது தொகையை திரும்ப எடுக்க முயன்றபோது, அவருக்கு ஒரு மின்னஞ்சல் எச்சரிக்கை வந்துள்ளது.

அதில் குறிப்பிட்டபடியே டோனா, அந்த நிறுவனத்திற்கு அழைத்து பேசியுள்ளார்.

மட்டுமின்றி அவர்கள் கோரியபடியே ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளார். இருப்பினும் டோனாவுக்கு அந்த 13,000 பவுண்டு தொகையை வழங்க அந்த நிறுவனம் மறுத்து வருகிறது.

தமது தாயாருக்கு இணையத்தில் 13,000 பவுண்டுகள் பரிசு அடித்துள்ளதாக கேள்வியுற்ற அவரது மகன், இது அருமையான தருணம், கண்டிப்பாக தமக்கும், தமது சகோதரர்களுக்கும் விருந்து ஏற்பாடு செய்வார்.

நிதி நெருக்கடியால் இதுவரை தமது பிள்ளைகளுக்கு செய்துதர முடியாதவற்றை அவர் இந்த தொகையில் கண்டிப்பாக செய்வார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குறித்த நிறுவனம் கால அவகாசம் கேட்டுள்ளதுடன், வயது உள்ளிட்ட சில ஆவணங்களை கேட்டுள்ளதாகவும், அவர்கள் உரிய ஆவணங்களை வழங்கிய பின்னர், குறித்த தொகையை அவர்கள் கைப்பற்றலாம் என தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers