பிரித்தானியாவில் பணத்துக்காக பலரை ஏமாற்றி வந்த இந்திய பெண்.... அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பெண், பணத்துக்காக தான் ஒரு மருத்துவர் என போலியாக பலரை ஏமாற்றிய வழக்கில் அவரை குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் Coventry நகரை சேர்ந்தவர் கமலேஷ் பஷி (58). இவர் தன்னை ஒரு கைதேர்ந்த மருத்துவராக பலரிடம் காட்டி கொண்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

மேலும், தான் ஒரு தகுதிவாய்ந்த மருத்துவர், செவிலியர், தொழில்முறை சிகிச்சையாளர், பிசியோதெரபிஸ்ட் என கூறி பலரை ஏமாற்றி வந்துள்ளார்.

முக்கியமாக வயதான நோயாளிகளையே பஷி குறிவைத்து மோசடி செய்து வந்தார். தன்னை மருத்துவ நிபுணராக அவர்கள் ஏற்கவேண்டும் என தூண்டியுள்ளார்.

நோயாளிகளின் பிரச்சனை குறித்து அறியாமலேயே முக்கியமான மருந்துகளையும் கொடுத்து வந்துள்ளார்.

பஷியின் ஏமாற்று வேலை வெளியில் தெரியவந்த நிலையில் பொலிசார் அவரை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

நோயாளிகளிடம் இருந்து மோசடி செய்து பணத்தை பெறவே பஷி இப்படியான விடயத்தை மேற்கொண்டுள்ளார்.

முக்கியமாக, பஷி கொடுத்த மருந்துகளை சாப்பிட்ட நோயாளிகள் ஆபத்தான விளைவுகளை சந்தித்திருக்கலாம் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அவர் மீதான குற்றங்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதால் அவரை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பஷிக்கு கொடுக்கப்படும் தண்டனை விபரங்கள் வரும் மே மாதம் 5ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்