லொட்டரியில் கொட்டிய பரிசுமழை: ஆடம்பர காரில் வந்த பண்ணைத்தொழிலாளிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லொட்டரியில் விழுந்த பரிசுத்தொகையை வாங்குவதற்காக வந்த நபர், கடைசி நேரத்தில் பரிசு சீட்டினை வீட்டிலேயே மறந்து விட்டு வந்துள்ள வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.

வட அயர்லாந்தின் Raphoe பகுதியில் பண்ணை தொழிலாளியாக பணிபுரிந்து வரும் ஓத்ரான் டோஹெர்டி (23), கடந்த சில நாட்களுக்கு முன்பு லொட்டரியில் 850,000 பவுண்டுகளை வென்றுள்ளார்.

அதனை வாங்குவதற்காக ஆடம்பர கார் ஒன்றில் சென்றிருக்கிறார். ஆனால் அங்கு சென்ற பின்னர் தான் அவருக்கு ஞாபகம் வந்துள்ளது.

பரிசு சீட்டினை 10 மைல்கள் தூரத்தில் உள்ள தன்னுடைய வீட்டிலேயே மறந்து வந்திருப்பது. பின்னர் பரிசு சீட்டினை எடுத்து வந்து தன்னுடைய பரிசு தொகையினை கைப்பற்றியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள டோஹெர்டி, ஒரு நாள் எங்களுடைய பண்ணையில் கடுமையாக வேலை செய்த பின்னர் என்னுடைய தந்தை கொடுத்த பரிசு தான் இந்த லொட்டரி டிக்கெட். ஒரு மாதம் விடுமுறைக்கு சென்று நாங்கள் அனைவரும் சேர்ந்து கொண்டாட உள்ளோம்.

அதேசமயம் என்னுடைய பண்ணை தொழிலை நான் விட மாட்டேன். எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் தான் அதனை தேர்ந்தெடுத்தேன் என கூறியுள்ளார்.

டோஹெர்டியின் தந்தை லியாம் கூறுகையில், சனிக்கிழமையன்று பண்ணையில் அதிக வேலை இருந்ததால், சாப்பிட எதாவது வாங்கலாம் என்று Raphoe-விற்கு சென்றேன். அங்கு என்னுடைய மனைவி மார்கரெட், மகன் மற்றும் எனக்கு என 3 லொட்டரி டிக்கெட்டுகளை வாங்கினேன்.

1ம் திகதியன்று எனக்கு மகன் போன் செய்து லொட்டரியில் பரிசு விழுந்துவிட்டதாக கூறினான். ஆனால் நான் அதனை நம்பவில்லை. முட்டாள்கள் தினத்தில் என்னை ஏமாற்ற பார்க்கிறான் என நினைத்ததாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...