Brexit விவாதத்தின்போது திடீரென நாடாளுமன்றத்திற்குள் அரை நிர்வாணமாக நுழைந்த பெண்களும் ஆண்களும்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் பிரெக்சிட் குறித்து காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உடை களைந்து அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பார்வையாளர்களையும் பிரிக்கும் கண்ணாடி சுவரில் பசை போட்டு தங்கள் பின் பக்கங்களை ஒட்டிக் கொண்டு அவர்கள் நின்றார்கள்.

மக்களின் நேரத்தை வீண் விவாதம் செய்து வீணடிப்பதாக அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை குற்றம் சாட்டினார்கள்.

பார்வையாளர்கள் பலரும் அவர்களை புகைப்படம் எடுக்க முயல, நாடாளுமன்ற நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

சபாநாயகர், அவர்களை கண்டுகொள்ள வேண்டாம் என்றும், தொடர்ந்து விவாத நடவடிக்கைகளில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டார்.

இன்னொரு பக்கம் இது ஒரு பெரும் பாதுகாப்புக் குளறுபடி ஆகும்.

இவ்வளவு பாதுகாப்பான நாடாளுமன்றத்தில் இப்படி போராட்டக்காரர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் நாடாளுமன்ற பாதுகாவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும், அவர்களை புகைப்படம் எடுத்த பார்வையாளர்களையும் கைது செய்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்