இளவரசர் ஹரியை கட்டியணையத்து வைரலான 99 வயது தோழி மரணம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் தோழியான 99 வயது மூதாட்டி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் டாப்னே துனே (99). கடந்த 2015-ல் இளவரசர் ஹரி அந்த நாட்டுக்கு சென்ற போது மூதாட்டி டாப்னேவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

இதன்பின்னர் எப்போது அவுஸ்திரேலியாவுக்கு ஹரி சென்றாலும் டாப்னேவை சந்தித்து நட்பு பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மெர்க்கலை திருமணம் செய்து கொண்ட பின்னர் ஹரி அவுஸ்திரேலியாவுக்கு சென்ற போதும் ஒருவரும் ஜோடியாக டாப்னேவிடம் ஆசிபெற்றனர்.

இந்நிலையில் 5 நாட்களுக்கு முன்னர் டாப்னே தனது பிறந்தநாளை கொண்டாடினார்.

இதையடுத்து மறக்காமல் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து அட்டையை அனுப்பினார் ஹரி.

அதில் தனது வாழ்த்துக்களுடன் சேர்த்து தனது மனைவியின் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.

ஹரியை அந்த பாட்டி கட்டியணைத்து முத்தமிட்டதும் முன்னர் தலைப்பு செய்தியானது. டாப்னே சில காலமாக நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி டாப்னே உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்