சிறப்பாக நடைபெற்ற லண்டன் மாநாட்டின் சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவ ஆசிரிய சங்க 25 வது வெள்ளிவிழா 2019

Report Print Dias Dias in பிரித்தானியா

கடந்த 23.03.2019 ( சனிக்கிழமை) லண்டன் மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட தென்மராட்சி உறவுகள் கூடிய மகிழ்வான நேரம்.

நிகழ்வின் பிரதம அதிதியாக Dr.சுப்றா குகதாசன் மற்றும் சிறப்பு அதிதியாக சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் திரு.N.சர்வேஸ்வரன் மற்றும் அனைத்து நாடுகளின் இந்துவின் பழையமாண சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

லண்டன் பழைய மாணவ சங்க தலைவர் திரு.க.பாலகிருஸ்ணன் அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் இனிதாக அமைந்தது.

அகவணக்கம், மங்கலவிளக்கேற்றல், கல்லூரிக்கீதம் தொடர்ந்து வரவேற்புரை, தலைமையுரையினை தொடர்ந்து இந்தியாவில் இருந்து வருகை தந்திருந்த பாடகர்களின் பாடலுடன் எமது பழைய மாணவர்களும் இணைந்து சிறப்பாக பாடினார்கள்.

தொடர்ந்து விருந்தினர்கள் உரை,இந்து அன்னை நூல் வெளியீடு (வெள்ளிவிழா சிறப்பு மலர்) நடனம், பாடல், ஆடல் என நிகழ்வுகள் இனிமையாக நகர்ந்தது மகிழ்வை மட்டுமல்ல பாராட்டுக்களையும் பெற்றது.

முக்கியமாக லண்டனில் பழைய மாணவ ஆசிரிய சங்கத்தினை ஆரம்பித்து வைத்த மூத்த ஆசிரியர்கள், மாணவர்கள் கௌரவிக்கப்பட்டமை பாராட்ட வேண்டிய நிகழ்வே.

அத்துடன் பல நாடுகளில் இருந்து இம்முறை முப்பதுக்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள் கலந்து கொண்டமை சிறப்பே.

முக்கியமாக பிரான்ஸ், யேர்மனி, சுவிஸ், கனடா, நோர்வே, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்தமை இந்துவின் பெருமையை உலக அரங்கில் எடுத்துக்காட்டிய நிகழ்வே.

நிகழ்வினை சிரித்த முகத்துடன் IBC சு.சுதர்சன் மற்றும் IBC வி.சிவகாமி மிகவும் சிறப்பாக தொகுத்து வழங்கியிருந்தார்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்