மாரடைப்பால் உயிரிழந்த நபர்..... 6 நிமிடங்கள் கழித்து நடந்த அதிசயம்... பாதிக்கப்பட்டவரே வியப்புடன் அளித்த விளக்கம்

Report Print Raju Raju in பிரித்தானியா

வேல்ஸில் மாரடைப்பு ஏற்பட்டு 6 நிமிடங்கள் உயிரிழந்த நபருக்கு மீண்டும் உயிர் வந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக பிழைத்துள்ளார்.

ஆண்ட்ரூ பேர்னெட் (45) என்பவருக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள நிலையில் அது தொடர்பான துறையில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் தனது 7 வயது மகன் செப் உடன் ஓய்வு மையத்துக்கு ஆண்ட்ரூ சென்றார்.

அங்கு மகனுடன் கால்பந்து விளையாடி கொண்டிருக்கும் போது ஆண்ட்ரூவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே சுருண்டு விழுந்தார்.

இதையடுத்து 6 நிமிடத்துக்கு ஆண்ட்ரூவின் இதயம் நின்று போய் உயிர் பிரிந்தது.

அப்போது அந்த ஓய்வு மையத்தின் ஊழியர்களான பென் மற்றும் ஷீலா ஆகியோர் உடனடியாக defibrillator எனப்படும் கருவியின் உதவியுடன் அவரின் உயிரை காப்பாற்ற முயன்றனர்.

பின்னர் ஆண்ட்ருவின் இதயம் துடிக்க தொடங்கியவுடன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் உயிர் பிழைத்தார்.

மூன்று வாரங்கள் ஆண்ட்ரூ மருத்துவமனையில் தங்கியிருந்த நிலையில் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இச்சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் 19ஆம் திகதி நடந்த நிலையில் தற்போது வெளியில் தெரியவந்துள்ளது.

மறுபிறவி எடுத்துள்ள ஆண்ட்ரூ கூறுகையில், அதிர்ஷ்டத்தால் தான் தற்போது உயிரோடு இருப்பதாக கருதுகிறேன்.

காரின் இன்ஜினை ஆப் செய்தால் எப்படி அமைதியாக நின்று விடுமோ, அப்படிதான் நான் உயிரற்று கிடந்தேன்.

என் உடல் ஆரோக்கியாகவே உள்ளது, சரியாக உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி எல்லாம் செய்து வருகிறேன்.

பென்னும், ஷீலாவும் உடனடியாக செயல்பட்டு உதவியதற்கு நன்றி, என் மகன் கண்முன்னாலேயே எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

நல்லவேளையாக அங்கு என்ன நடந்து என்பதை அவன் உணரவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers