அசிங்கமாக இருக்கு.. கடன் வாங்கீட்டு ஓடிப்போனவன்னு ஏன் சொல்றீங்க? புலம்பும் விஜய் மல்லையா!

Report Print Kabilan in பிரித்தானியா

எனது கடனுக்காக அதிக சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக பிரதமர் மோடியே கூறிய நிலையில், கடன் வாங்கிவிட்டு ஓடிப்போனவன் என பா.ஜ.க கூறுவது ஏன்? என விஜய் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார்.

கிங்க் பிஷர் மதுபான நிறுவனத்தின் நிறுவனரான விஜய் மல்லையா, இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளிடம் ரூ.9000 கோடி அளவுக்கு கடன் வாங்கிவிட்டு பிரித்தானியாவின் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார்.

தற்போது அவர் லண்டனில் இருக்கிறார். ஆனால் அவரது சொத்துக்களை இந்திய அரசாங்கம் முடக்கி விட்டது. இந்நிலையில், பா.ஜ.க-வினர் தன்னை கடன் வாங்கிக் கொண்டு ஓடிப்போனவன் என்று கூறுவதை மல்லையா கண்டித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறுகையில், ‘நான் வாங்கிய ரூ.9000 கோடி கடனுக்காக, இரண்டு மடங்காக அதாவது 14 ஆயிரம் கோடி மதிப்புள்ள என்னுடைய சொத்துக்களை இந்திய பறிமுதல் செய்துவிட்டார்கள்.

இதனை பிரதமர் நரேந்திர மோடியே ஒரு நேர்காணலில் கூறி இருக்கிறார். அப்படி இருக்கும்போது என்னை பா.ஜ.க-வின் செய்தி தொடர்பாளர், கடன் வாங்கிக்கொண்டு ஓடிப்போனவன் என்று கூறுவது ஏன்?. 1992ஆம் ஆண்டில் இருந்து லண்டன் குடியுரிமை பெற்றவன் நான்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers