67 வயதான கோடீஸ்வரரை மணந்த 29 வயதான அழகிய பெண்... பணத்துக்காக நடந்த திருமணமா? வெளியான விளக்கம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த 29 வயதான இளம் பெண், 67 வயதான பணக்கார தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட நிலையில் தன்னுடைய பணத்துக்காக அவர் என்னை மணக்கவில்லை என கணவர் கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஸ்டீவ் ஜீலின்ஸ்கி (67). இவர் பெர்த்தில் பெண்கள் நிர்வாண நிலையில் இருந்தபடி உணவு பரிமாறும் ஹொட்டலை நடந்தி வந்தார்.

இதோடு பல தொழில்களை செய்து வந்தார் ஸ்டீவ். இவருக்கு பெண் ஒருவரோடு ஏற்கனவே திருமணமான நிலையில் அவரோடு விவாகரத்தும் ஆனது.

இந்த விவாகரத்து தொடர்பாக ஸ்டீவ் $1.2 மில்லியன் பணத்தை செலவு செய்தார்.

இதையடுத்து திருமணமே இனி செய்ய மாட்டேன் என முன்னர் விரக்தியுடன் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் தான் பிரித்தானியாவை சேர்ந்த எமிலி சார்மன் (29) என்ற இளம்பெண் 2012-ல் அவுஸ்திரேலியாவில் செட்டில் ஆனார். அவருடன் ஸ்டீவுக்கு நட்பு ஏற்பட்டது.

பின்னர் இது காதலாக மாறிய நிலையில் சமீபத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

ஸ்டீவை விட 37 வயது குறைவான எமிலி அவரை திருமணம் செய்து கொண்டது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பேசிய ஸ்டீவ், எனக்கு 77 வயதாகும் போது எமிலிக்கு வெறும் 40 வயது தானே ஆகும், அப்போது எப்படியிருப்பீர்கள் என கேட்கிறார்கள்.

இப்போது எப்படி வாழ்கிறோமோ அப்படி தான் அந்த வயதிலும் வாழ்வோம்.

என் மீது எமிலி ஆசை கொள்வார் என நான் கனவிலும் நினைக்கவில்லை, அவர் என்னுடன் நட்பானார், பின்னர் காதலிக்க தொடங்கினோம்.

என்னிடம் உள்ள பணத்துக்காக எமிலி என்னை திருமணம் செய்யவில்லை, என் மீது உண்மையான காதல் கொண்டுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers