பிரித்தானிய குடியுரிமை ரத்து செய்யப்பட்ட ஷமீமாவின் கணவருக்கு அதிரடி தடை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் இருந்து தப்பியோடிய ஷமீமாவின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதை அடுத்து அவருடைய கணவருக்கும் தடை விதித்து உள்துறை செயலாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியாவில் இருந்து 2015ம் ஆண்டு தன்னுடைய தோழிகளுடன் வெளியேறிய ஷமீமா என்கிற மாணவி, சிரியாவில் பயங்கரவாத அமைப்பில் உறுப்பினராக இருந்து வரும் யாகோ ரிட்ஜ்(27) என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்த தம்பதியினருக்கு பிறந்த 2 குழந்தைகள் ஏற்கனவே இறந்த நிலையில், கடந்த மாதம் பிறந்த 3 வது குழந்தையும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டது.

குழந்தையுடன் பிரித்தானியாவில் குடியேற ஷமீமா தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக அவருடைய குடியுரிமையை ரத்து செய்து பிரித்தானிய உள்துறை செயலாளர் சஜித் ஜாவிட் நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த நிலையில் பிரித்தானியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் ஷமீமாவின் கணவர் யாகோ ரிட்ஜ் பெயரையும் உள்துறை செயலாளர் சேர்த்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பிலிப் ஹோலொபோன், யாகோ ரிட்ஜ்க்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை வரவேற்கப்பட வேண்டிய விடயம். இந்த மாதிரியான நடவடிக்கைகளை நாங்கள் இன்னும் எதிர்பார்க்கின்றோம். இதுபோன்று பிரித்தானியாவிற்கு திரும்பி வரும் போராளிகளால் அடுத்த சில மாதங்களில் பெரும் ஆபத்து ஏற்படலாம். அவர்கள் இந்த நாட்டில் வரவேற்கப்படுவதில்லை என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக நெதர்லாந்தில் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக யாகோ ரிட்ஜ் 6 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers