பல நாடுகளின் பாஸ்போர்ட்..தப்பிப்பதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி? லண்டனில் கைதான இந்திய கோடீஸ்வரர் பற்றி திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இந்திய கோடீஸ்வரர் நிரவ் மோடி பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தப்பிக்க திட்டம் திட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் நிரவ் மோடி. வைர வியாபாரியான இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,000 கோடி கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

இதனால் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற இவர், லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின் கைது செய்யப்பட்ட அவர் லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கபட்டுள்ள அவரை இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான வேளையில் மத்தி அரசு இறங்கியுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நிர்வ் மோடி குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லண்டனில் நிரவ்மோடி பிடிபட்ட போது, அவரிடம் பல நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் பெரும்பாலானவை காலாவதியாகி விட்டதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய 3 நாடுகளுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட்டுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவரது இந்திய பாஸ்போர்ட் ஏற்கெனவே ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது பணபலம் மூலம் இந்த பாஸ்போர்ட்டுகளை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் நிரவ் மோடி தான் கைதாவதை தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பசிபிக் பெருங்கடலில் உள்ள வனாது தீவில் செட்டிலாக திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அவர் வனாது நாட்டு குடியுரிமை கோரி விண்ணப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

இந்த வனாது தீவு அவுஸ்திரேலியாவிலிருந்து 1,750 கி.மீற்றர் தொலைவில் உள்ளது.

அதுமட்டுமல்லாது சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக லண்டனில் பெரிய சட்ட ஆலோசனை நிறுவனங்களின் உதவியை அவர் நாடி இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால், கைதுசெய்யப்பட்டதன் மூலம் அத்தனை திட்டங்களும் பலிக்காமல் போய்விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers