மகளை கூட பார்க்க முடியாது... சிறையில் இருந்து திரும்பும் இங்கிலாந்து வீரருக்கு கடும் நிபந்தனை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியாக நடந்துகொண்ட வழக்கில் 3 வருட சிறைத்தண்டனை பெற்ற இங்கிலாந்து கால்பந்து வீரரை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக அவருடைய தந்தை நள்ளிரவில் இருந்து சிறையிக்கு வெளியில் காரில் காத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான ஆடம் ஜான்சன், 15 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியில் முத்தம் கொடுத்து, கட்டியணைத்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், 800க்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளை அந்த சிறுமிக்கு அனுப்பியிருப்பதும், அதனை முற்றிலும் அழித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த வழக்கானது கடந்த 2016ம் ஆண்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பொழுது 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

3 ஆண்டுகால சிறைத்தண்டனை தற்போது முடிவடைத்திருக்கும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அவர் இன்று விடுவிக்கப்படவுள்ளார். சிறையில் இருந்து வெளியில் சென்றதும் ஜான்சன் தனியாக தனது மகளை கூட பார்க்க முடியாது என உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் அவரை பொதுமக்கள் பார்ப்பதற்கு முன்பே வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக நள்ளிரவில் இருந்து அவருடைய தந்தை, சிறைக்கு வெளியில் காரில் காத்துக்கொண்டிருந்துள்ளார்.

ஆடம் வெளியில் வந்ததும் தனது கால்பந்து வாழ்க்கையை மீண்டும் ஆரம்பிக்க ஆர்வமாக உள்ளார். ஆனால் இங்கிலாந்து அதற்கு வாய்ப்பு கொடுக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers