மேகன் வாழ்க்கையில் ரகசியமாக இருக்கும் இரண்டாவது மிக முக்கியமான மனிதர்: யார் தெரியுமா?

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி மேகனுக்கு வாழ்க்கையில் அதிக செல்வாக்கு செலுத்தும் இரண்டாவது முக்கியமான நபர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரித்தானியா இளவரசி மேகனின் ரகசிய ஆண் நண்பரான மார்கஸ் ஆண்டர்சன், அவரது வாழ்க்கையில் அதிக செல்வாக்கு செலுத்துவதால், முக்கியமான மனிதர்களில் இரண்டாவது இடம் வகிப்பதாக கூறப்படுகிறது.

கனடா நாட்டை சேர்ந்த 41 வயதான மார்கஸ், முதன்முதலாக 2011 ஆம் ஆண்டு டொரொன்டோவிலுள்ள ஏ-லிஸ்ட் உறுப்பினரின் கிளப்பில் பணிபுரியும் பொழுது மேகனிடம் அறிமுகம் ஆனார்.

ஒருமுறை மார்கஸ், மேகனுடன் தற்போது நல்ல நண்பர்களாக இருந்து வரும் அமல் குளூனி மற்றும் ஜெசிகா முல்ருனி ஆகியோரை அறிமுகப்படுத்தியவுடன், இருவருக்கும் இடையில் நெருக்கமான பிணைப்பு உருவாகியதாக கூறப்படுகிறது.

மார்கஸ் குறித்துமேகன் தன்னுடைய இடுகையில், "நீ இல்லாமல் நான் என்ன செய்வேன், என் அன்பான, ஆதரவான மற்றும் முடிவில்லாத வேடிக்கை நண்பர் ??"

"எனக்கு என்ன தெரியும் ... நான் சலிப்படைவேன். குறைந்த சுவாரஸ்யத்துடன் வாழ்க்கை முடிவில்லாமல் இருக்கும். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். இப்போதும், எப்போதும் உனக்காக சந்தோஷமாக இருக்கிறேன். உன்னை நேசிக்கிறேன் x.'' என குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிறகு மாட்ரிட் பயணத்தின் போது இந்த ஜோடி மீண்டும் நெருக்கமாக மாறினார்கள். அந்த சமயங்களில் 'மார்கஸ் தன்னுடைய இரண்டு நாய்களின் மாமா' என மேகன் செல்லமாக அழைத்துள்ளார்.

திரைப்பட தயாரிப்பாளர் ட்ரெவோர் ஏங்கல்சன் உடன் மேகனின் முதல் திருமணம் முறிந்த பிறகு, அவருக்கான ஒரு நண்பரை தேடும் முயற்சியில் மார்கஸ் தீவிரம் காட்டியதாக கூறப்படுகிறது.

ஆனால் அதற்கான சரியான நபர் கிடைக்காத காலங்களில் மேகன் மீது மார்கஸிற்கு காதல் மலர்ந்திருக்கிறது.

பின்னர் 2011ம் ஆண்டு இளவரசர் ஹரியை மேகனுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். அன்றிலிருந்து மார்கஸ் மேகனுக்கு இன்னும் நெருக்கமான மனிதராக மாறியிருக்கிறார்.

மேகனும், ஹரியும் தனிமையில் சந்திக்க, சுற்றுலா செல்ல என பலமுறை மார்கஸ் உதவி செய்துள்ளார்.

சமீபத்தில் நியூயார்க் நகரில் நடைபெற்ற மேகனின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கூட மார்கஸ் கலந்துகொண்டு உதவியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்