உலக ஈழத்தமிழர்களுக்கான குறும்பட போட்டி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

ஈழத்தமிழர்களுக்கான குறுந்திரை போட்டி லண்டனில் மார்ச் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

பெருந்திரை நோக்கி பயணிக்கும் இந்த குறும்பட போட்டி ஈழத்தமிழர்களுக்கான ஒரு வாய்ப்பு.

இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு முழு நீள திரைப்படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கவிருக்கிறது.

இதுவரை இரண்டு முழு நீள திரைப்படத்தை உருவாக்கியுள்ள ஐபிசி தமிழ் இந்த போட்டியின் ஊடாக மூன்றாவது இயக்குநரை கண்டெடுக்கவுள்ளது.

உலக நாடுகளில் இருந்து வந்துள்ள மொத்தம் 87 படங்களில் தற்போது 6 படங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த 6 படங்களில் சிறந்த குறும்படத்தை தெரிவு செய்வதற்கு தமிழ் திரைப்பட உலகில் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், அமீர் மற்றும் லெனின் எம் சிவம் ஆகியோர் நடுவர்களாக கலந்துகொள்ளவிருக்கின்றனர்.

இந்த 6 குறும்படங்களில் வெற்றிபெறப்போகும் குறும்படம் எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த முடிவுகள் லண்டனில் உள்ள Feltham நக்ஷத்திரா மண்டபத்தில் அறிவுக்கப்படவுள்ளது. மார்ச் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் இறுதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்