தெரஸா மேயின் Brexit ஒப்பந்தத்திற்கு ஆதரவளிக்க எதிரணியினரை வற்புறுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
350Shares

நேற்றிரவு தெரஸா மேக்கு ஆதரவளிக்குமாறு கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளதையடுத்து, பிரெக்சிட்டை நிறைவேற்றும் பிரித்தானிய பிரதமர் தெரஸா மேயின் நம்பிக்கை சற்று வலுப்பெற்றுள்ளது எனலாம்.

அவர்கள் பிரெக்சிட்டுக்கு எதிரானவர்களையும் தெரசா மேயை தோற்கடிக்க விரும்பும் மற்ற கன்சர்வேட்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், பிரதமரின் ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளூமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் பிரபல பிரித்தானிய பத்திரிகை ஒன்று நேற்று பிரெக்சிட் தொடர்பாக 1007 பேரிடம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியது.

அதில் 57 சதவிகிதம் பேர் தெரஸா மேயின் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

அடுத்த வாரம் ஐரோப்பிய ஒன்றிய விலகல் ஒப்பந்தம் தொடர்பாக நடைபெற இருக்கும் வாக்கெடுப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரஸா மேக்கு ஆதரவளிக்க வேண்டுமா என்ற கேள்விக்கு, 57 சதவிகிதம் பேர் ஆதரவளிக்க வேண்டும் என பதிலளித்துள்ளனர். வேண்டாம் என்று 26 சதவிகிதம் பேர் பதிலளித்துள்ளனர்.

மொத்தத்தில் நடந்து வரும் முன்னேற்றங்களைப் பார்க்கும்போது, தெரஸா மேயின் ஒப்பந்தத்திற்கு ஆதரவு பெருகுவதாகவே தற்போதைக்கு தோன்றுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்