பிரெக்ஸிட்: பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதற்கான பிரெக்ஸிட்டை தாமதப்படுத்தக்கோரி நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து மார்ச் மாதம் 29ம் திகதியுடன் பிரித்தானியா அதிகாரப்பூர்வமாக விலகுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்படி விலகும் போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேண வேண்டிய உறவுகள் குறித்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த ஒப்பந்தம் ஜனவரி மாதம் நடந்த வாக்கெடுப்பில் தோல்வியடைந்த நிலையில், தற்போது நடந்த வாக்கெடுப்பிலும் தோல்வி அடைந்தது.

இதனை தொடர்ந்து ஒப்பந்தம் ஏதும் இல்லாமல் வெளியேறலாமா என்ற கோரிக்கையும் எம்பிக்களால் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரெக்ஸிட் விவகாரத்தை தாமதப்படுத்தலாமா என விவாதித்த நாடாளுமன்றம், அது தொடர்பில் வாக்கெடுப்பையும் நடத்தியது.

இதில் 413 எம்பிக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும், கூடாது என 202 பேரும் வாக்களித்தனர்.

எனவே 211 வாக்குகள் வித்தியாசத்தில் தாமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி பெற்றது.

இந்நிலையில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு வெற்றி பெற்றால் மூன்று மாதம் தாமதிப்பதற்கு தாம் கோரிக்கை வைக்க முடியும் என பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளார்.

ஒருவேளை மீண்டும் நிராகரிக்கப்பட்டால் பிரித்தானியா விலகுவது மேலும் தாமதமாகலாம் என தெரிகிறது, எனினும் இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் ஒப்புக் கொள்ள வேண்டும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers