பிரித்தானியாவில் இவர்களுக்கான பணி விசா வரம்பு நீக்கம்

Report Print Fathima Fathima in பிரித்தானியா

பிரித்தானியாவில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் பணி விசாக்களுக்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரான பிலிப் ஹேமண்ட் நேற்று முன்தினம் வருடாந்திர பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதன்போதே இந்த அறிவிப்பை வெளியிட்டார், மேலும், பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சியில் தொழில்நுட்ப புரட்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

இதனை இன்னும் மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது, இதன் ஒரு பகுதியாக ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுவோருக்கு வழங்கப்படும் பணி விசாக்களுக்கான வரம்பு நீக்கப்பட்டுள்ளது, செப்டம்பர் மாதம் முதல் இது அமுலுக்கு வரும் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers